×

மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மரணம் குறித்த வழக்கு: குமரி எஸ்.பி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விக்னேஷின் மரணம் குறித்த விசாரணையை காவல்துறையின் வேறு பிரிவிற்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணரை சேர்ந்த அலோசியஸ் பிரான்சிஸ்கொ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானியான தமது கணவர் தினேஷ், உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் முக்கடல் அருகே  கால்வாயில் கடந்த ஜூலை மாதம் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் அலோசியஸ் பிரான்சிஸ்கொ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நண்பர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். எனவே தமது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து பூதபாண்டிபுரம் போலீசார் நடத்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் விசாரணையை காவல்துறையின் வேறு பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையையும் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Tags : death ,scientist ,Mahendragiri ISRO Research Center ,Kumari SP ,ICT Branch ,Mahendragiri ISRO Research Center Scientist , Mahendragiri, ISRO scientist, death, case, Kumari SP, answer, Icort Branch order
× RELATED 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது