×

சென்னை மாநகராட்சியில் குறைந்த வாக்காளர்களை கொண்ட 159வது வார்டு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலம் 159வது வார்டில்தான் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டல வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு நேற்று வைக்கப்பட்டது இதில், ஆலந்தூர் 12வது மண்டலத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 459.  

இதில், அதிகப்படியாக 156வது வார்டில் 29 ஆயிரத்து 590 வாக்களர்களும், 159வது வார்டில் குறைந்தபட்சமாக  வெறும் 2 ஆயிரத்து 921 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இது சென்னை மாநகராட்சி  வார்டுகளிலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட வார்டு பகுதியாகும். இந்த  வார்டுக்குள் பன்னாட்டு விமான நிலையம், கார் ஷோரூம்கள் உள்ளிட்டவை   வருவதால் அதிக வரி வசூலை அள்ளித்தரும் வார்டாக உள்ளது.


Tags : voters ,Madras Corporation , Ward 159, lowest number of voters , Madras Corporation
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...