திமுக இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தேர்வுக்கு நேர்காணல் : உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணி சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் தேர்வுக்கு நாளை நேர்காணல் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி திமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான நேர்காணல் வரும் 6ம் தேதி (நாளை) காலை 10 மணி அளவில் திமுக இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Announcement ,Udayanidhi Stalin DMK Youth Team ,District Organizer Selection ,DMK Youth Team ,Udayanidhi Stalin , DMK Youth Team ,District Organizer Selection, Announcement by Udayanidhi Stalin
× RELATED Dyscalculia மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தலாம்...: சிபிஎஸ்இ அறிவிப்பு