×

மாமனார் வாகனத்தை தீவைத்து எரித்த மருமகன் கைது

பெரம்பூர்: பெரம்பூர் மரியநாயகம் பிரதான சாலையை சேர்ந்தவர் முகமது சுராஜூதின் (46), தனியார் ரத்த பரிசோதனை ஆய்வக ஊழியர். இவரது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசிப்பவர் ரமேஷ் (34). இருவரும் தங்களது பைக்குகளை வீட்டிற்கு முன் நிறுத்துவது வழக்கம். அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது பைக்குகள் நேற்று முன்தினம் காலை தீயில் எரிந்து கருகிக் கிடந்தது.  போலீசார் விசாரணையில்  முகமது சுராஜூதினின் மருமகன் காஜா முகைதின் (29) என்பவர், அதிகாலை 3.30 மணியளவில் மண்ணெண்ணெய் ஊற்றி, சுராஜூதின் பைக்கை தீ வைத்ததும், இதில் அருகில் இருந்த பைக்கும் எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், காஜா முகைதினை பிடித்து விசாரித்தபோது, அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும், அதற்கு காரணமான மாமனார் பைக்கை தீவைத்து எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.

Tags : Son-in-law ,father-in-law , Son-in-law arrested, setting fire , father-in-law
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...