×

அசோக் லேலண்ட் 15 நாள் உற்பத்தி நிறுத்தம்

மும்பை: அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த மாதம் 2 முதல் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திலும் வாகன விற்பனை சரிந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. கனரக வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், கடந்த மாதம் உற்பத்தி நிறுத்தம் அறிவித்தது. இதை மேலும் 5 நாட்கள் நீட்டித்து, கடந்த மாதம் 28ம் தேதி, 30ம் தேதி, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் நேற்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில், அக்டோபர் மாதம் 2 நாள் முதல் 15 நாள் வரை உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் எண்ணூர் தொழிற்சாலையில் மட்டும் 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து உற்பத்தியை நிறுத்துவதால் இவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Ashok Leyland , Ashok Leyland, 15 day production stop
× RELATED மிக்ஜாம் புயல் மழை நிவாரணப்...