×

வட்டி குறைப்பால் பங்குச்சந்தை கடும் சரிவு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக சரிந்தது. இதை தொடர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்த பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், இதற்கு ஏற்ப வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சூழலை உருவாக்கவும் 5வது முறையாக ெரப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது.

இதை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 433.56 புள்ளி சரிந்து. 37,673.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 139.25 புள்ளி சரிந்து 11,174.75 ஆகவும் இருந்தது.  கோடக், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ, டாடா மோடாடார்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. இதுபோல், தேசிய பங்குச்சந்தையிலும் ஐடி பங்குகள் தவிர மற்ற பங்குகள் சரிவுடனே முடிந்தன.

Tags : Stock market slump , interest reduction
× RELATED ஜி.பி.எப். வட்டி குறைப்பு