×

சீன ஓபன் டென்னிஸ் பைனலில் ஆஷ்லி பார்தி

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) தகுதி பெற்றார். அரை இறுதியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் நேற்று மோதிய பார்தி 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 6-4, 6-3 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்தி  கிகி பெர்டனஸ் மோதுகின்றனர்.

Tags : Ashley Bharti ,Chinese Open Tennis Final ,The Chinese Open Tennis Final , Ashley Bharti,Chinese Open Tennis Final
× RELATED யுஎஸ் ஓபனில் விளையாட மாட்டேன்... ஆஷ்லி பார்தி அறிவிப்பு