×

ஒரு மாதமாக காலியாக கிடக்கிறது... தமிழக பாஜ தலைவர் நியமனம் எப்போது?

சென்னை: தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தராஜன் இருந்து வந்தார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் தலைவர், உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். இதனால், தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. இந்த பதவியை பிடிக்க தமிழக பாஜக முன்னணி தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பெயர்கள் அதில் அடிப்பட்டது. இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் டெல்லியில் உள்ள தலைமையை அணுகி வந்தனர். இதனால் ஓரிரு நாளில் தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், சுமார் 1 மாதமாகியும் தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தலைவர்கள் நியமிக்கப்படாததால் முடிவை எடுக்க முடியாமல் பாஜகவினர் திணறி வருகின்றனர். யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் தொண்டர்களும் தடுமாறி வருகின்றனர்.  அதே நேரத்தில் இந்தியா முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று, கட்சி ரிதீயிலான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் டிசம்பர் வரை நடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படமாட்டார் என்று கூறப்படுகிறது. டிசம்பரில் கட்சி தேர்தல் முடிந்தவுடன் தமிழக பாஜக தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : BJP ,Tamilnadu BJP , BJP, Tamilnadu BJP, BJP leader,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...