×

உத்திரமேரூர் அருகே திருவானைக்கோவில் அரசு பள்ளிக்கு படையெடுக்கும் விஷ பூச்சுகளால் மாணவர்கள் பீதி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருவானைக்கோவில் கிராமத்தில் அரசினர் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அக்கிராமத்தை சோந்த சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகே, செயல்பாட 3 கட்டிடங்கள் உள்ளன. இவைகள் பள்ளிக்கு சொந்தமானவை. இந்த 3 கட்டிடங்களையும் முறையாக பராமரிக்காததாலும் பள்ளியின் பயன்பாட்டில் இல்லாததாலும் கட்டிடங்களை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சுகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் வகுப்பறைக்குள்ளே விஷப்பூச்சுகள் தஞ்சம் அடைகின்றனர்.

மாணவர்கள் அச்சத்துடனே பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பெற்றோர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வகத்தினர் தலையிட்டு சம்மந்தபட்ட நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டு கட்டிடத்தினை சீரமைத்து வேறு அரசு அலுவலகத்திற்கு பயன்படுத்தவோ அல்லது கட்டிடத்தினை அகற்றவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : government school ,Thiruvanaikovu ,Uthramerur ,Thiruvanaikovil , Uthramerur, Government School, Thiruvanaikovil, Poisonous Pests, Students
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...