×

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு எதிரொலி; சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குசந்தைகள்

மும்பை: இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிந்து 37,673 புள்ளிகளில் வர்த்தமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144 புள்ளிகள் குறைந்து 11,170 புள்ளிகள் வர்த்தகம் முடிந்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்ற ரிசர்வ் வங்கியின் மதிப்பீடும் சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி குறைப்பால் வீடு, வாகனங்கள் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 4 முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில் மீண்டும் 5வது முறையாக விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம்.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது ஆர்பிஐ வங்கிகளிடமிருந்து பெறும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 6.9% ஆக இருக்கும் என்ற மதிப்பீட்டை இந்திய ரிசர்வ் வங்கி 0.8% குறைத்துள்ளது. அதே நேரம் 2020-2021ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைந்ததை அடுத்து கோடக், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி, வங்கிகளின் விலை பங்குசந்தையில் குறைந்துள்ளது.


Tags : Indian ,Indian Stock Exchange ,Nifty ,Mumbai Stock Exchange ,Sensex , Indian Stock Exchange, Mumbai Stock Exchange, Sensex, Nifty, Trading, Repo Rate
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்