×

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து இன்பதுரை முறையீடு : உத்தரவு குறித்த மெமோவும், தலைமை பதிவாளர் அறிக்கையும் வரட்டும் என ஐகோர்ட் கருத்து

சென்னை : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்பதுரை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதித்த தடை குறித்து மெமோ தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தாலும் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த மெமோவும், தலைமை பதிவாளர் அறிக்கையும் வரட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Tags : Supreme Court ,Chief Registrar , Radhapuram, Repeal, Count, Justice Jayachandran, Supreme Court
× RELATED பத்மநாபசுவாமி கோயிலை மன்னர்...