×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை

சென்னை : இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.9.75 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதுகுறித்த தகவல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.இந்நிலையில் 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Satyapratha Sahoo ,Tamil Nadu ,District Collectors ,Nanguneri ,Satyapratha Sahu ,Vikravandi , Lyme Election Officer, Satyaprata Sahoo, by-election, voter list, consultation
× RELATED தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்...