×

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகன் 800க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலம்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் தேடப்படும் கொள்ளையன் முருகன் டெல்லியில் தாஹி அலி தலைமையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெருங்கிய கூட்டாளி திருநெல்வேலி தினகரனுடன் சேர்ந்து 800க்கும் மேற்பட்ட கொள்ளையில் முருகன் ஈடுபட்டுள்ளான். கூட்டணி அமைத்து 2008ம் ஆண்டில் இருந்தே முருகன் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளான். ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரில் தான் அதிகமுறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். பெங்களூருவில் மட்டும் முருகன் மீது 180 கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு போலீசால் கைது செய்யப்பட்ட முருகன் 2011ல் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். பெங்களூருவில் நெருக்கடி முற்றியதால் தனது கொள்ளை தொழிலை முருகன் ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளான்.

கொள்ளையன் முருகனின் முக்கிய ஆசை பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பது தான் என்று போலீசார் தகவல் அளித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் மனாசா வினாவா என்ற தெலுங்கு படத்தை கொள்ளையன் முருகன் தயாரித்துள்ளான். ரூ.50 லட்சம் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு படம் வெளியாகாததால் தொடர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். தனது பட கதாநாயகிக்கு ரூ.6 லட்சம் மட்டுமே ஊதியமாக கொடுத்துள்ளான் முருகன். இரண்டாவதாக ஆத்மா என்ற தெலுங்கு படத்தை தயாரிக்க திட்டமிட்ட முருகனை சைபராபாத் போலீஸ் கைது செய்தது. முருகன் தயாரித்த படத்தில் அவனது நெருங்கிய உறவினர் சுரேஷ் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. சினிமா ஆசையில் முருகன் உறவினர் சுரேஷும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். பாலமுருகன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் முருகனின் உறவினர் சுரேஷ் நடத்தி வந்துள்ளான். கொள்ளையன் முருகனின் உறவினர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவில் கொள்ளை சம்பவமானது அரங்கேறியது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மடப்புரத்தை சார்ந்த மணிகண்டன் என்பவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு விலைச்சல் பகுதியில் கமலாம்பாள் தெருவில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் மணிகண்டனும், அவனது கூட்டாளி சுரேஷும் வந்து கொண்டிருந்த போது காவலர்களை கண்டவுடன் சுரேஷ் தன்னிடம் இருந்த நகை மூட்டையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

மேலும் தப்பியோடிய சுரேஷை பிடிப்பதற்காக மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஏற்கனவே ஒரு தனிப்படை, கொள்ளையர்களை தேடி வருகிறது.

Tags : Murugan ,robberies ,jewelery robbery ,Trichy ,Jewelers ,Lalitha Jewelery , Trichy, Lalitha Jewelery, jewelers, robbery
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்