×

கனமழையால் விலைவாசி ‘விர்’ ஒரு எலுமிச்சை பழம் ரூ.10

தேனி : ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் எலுமிச்சை விளைச்சல் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் எழுமிச்சை வாங்க தேனிக்கு வருகின்றனர். திடீரென ஏற்பட்ட கிராக்கி காரணமாக தேனி மார்க்கெட்டில் ஒரு பழத்தின் விலை ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சோத்துப்பாறை, அடுக்கம், வெள்ளகெவி, பெரியூர், சின்னூர் ஆகிய இடங்களில் எலுமிச்சை விளைச்சல் அதிகமாக உள்ளது. எப்போதும் கோடை காலத்தில் எலுமிச்சை விலை உயர்வது வழக்கம். தற்போது அக்டோபர் மாதத்தில் அதிக மழைப்பொழிவும், குளிரும் நிலவும் நேரத்தில் எலுமிச்சை ஒரு பழம் ஒரு ரூபாய்க்கு கூட விற்கப்படும். மிகவும் தரமான பழமாக இருந்தால் அதற்கு அதிகபட்ச விலை ரூ.2 ரஎன நிர்ணயம் செய்வார்கள்.

இதுவரை தேனி மாவட்ட மார்க்கெட் நிலவரம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இப்படித்தான் இருந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறி ஒரு பழம் ரூ.10க்கு விற்கப்படுகிறது. பத்து ரூபாய் கொடுத்தாலும், தரமான பழம் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து இந்த வரும் எழுமிச்சை பழம் வரத்து சுத்தமாக நின்றுவிட்டது.

தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் விளைச்சல் சரியாக இல்லை. இதனால் திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் இருந்து எலுமிச்சை வாங்க வியாபாரிகள் தேனி மார்க்கெட்டிற்கு வந்துள்ளனர். இவர்களிடையே எலுமிச்சை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. இதனால் வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட எலுமிச்சை மூடை தற்போது ரூ.5500க்கு விற்கப்படுகிறது. 50 கிலோ மூடை 11 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்து விட்டது.

இதுவரை எங்களின் வியாபார காலத்தில் இந்த பருவத்தில் பார்க்காத விலை உயர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு பழம் ரூ.10க்கு விற்றால் ன் நாங்கள் ஓரளவாவது முதலீடு செய்த பணத்தை மீட்க முடியும். ஆனால் இவ்வளவு விலையா? எனக் கேட்டு வாடிக்கையாளர்கள் வாங்க பின்வாங்குவது எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Vir , heavy rain,Lemon ,theni,
× RELATED ஆம் ஆத்மி மாஜி எம்பி காங்கிரசில் சேர்ந்தார்