×

களை கட்டிய தசரா விழா சுவாமி வேடமணிந்து வலம் வரும் பக்தர்கள்

சாயல்குடி : தசரா திருவிழா வருவதையொ ட்டி கடலாடியில் வேடமணிந்த பக்தர்கள் வீடு, வீடாக சென்று முத்தெடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி விஷேச காலத்தில் திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கடலாடி பத்திரகாளியம்மன் தசார குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதில் பலவகை காளி, மாடன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சியம்மன், நாகதேவதை, முனிவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேஷமிட்டு முத்து எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சாயல்குடி, எஸ்.தரைக்குடி, மேலச்செல்வனூர், சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பள்ளனேந்தல், பாப்பாகுளம்,கடலாடி, புரசங்குளம், மாரந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று முத்து எடுத்தும், அருள்வாக்கு கூறியும், அம்மனுக்கு பிடித்த சிம்பலக்க கொட்டு, உருமி மேளம் முழங்க கிராமங்களை ஊர்வலமாக வலம் வந்தனர். உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கடலாடி முத்தாரம்மன் கோயிலில் வழிபாடு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அக்னிசட்டி ஊர்வலமும் நடந்தது.

Tags : devotees ,Swami ,Dasara Function: Mutharaman Temple Festival , Dasara Function,Mutharaman Temple ,Festival ,Devotees
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்