×

சென்னை திருவொற்றியூரில் குடோனில் பதுக்கி குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது: 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை குடோனில் பதுக்கி விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வடசென்னை பகுதியில் சிறுசிறு கடைகளுக்கு குட்கா விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்றிரவு கொருக்குப்பேட்டை வழியாக குட்டியானை வண்டி ஒன்று சென்ற போது சந்தேகத்தின் பெயரில் அந்த வாகனத்தை தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி அருகே அந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் குட்கா இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் ஓட்டுநர் அமித் பாஷாவை கைது செய்தனர். அவனிடம் தீவிர விசாரணை செய்ததில் திருவொற்றியூர் பகுதியில் குடோனில் இருந்து கொண்டுவந்ததாக தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற தனிப்படையினர் காலணிப்பேட்டையில் இருந்த குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக சுமார் 300 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக வாங்கி அதை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சில்லறையாக விற்பனை செய்தது தெரியவந்தது.


Tags : traffickers ,Chennai ,TH ,stocking ,arrests , Chennai, Thiruvottiyur, Gudon, Gutka, 3 arrested, 300 kg Kutka, confiscated
× RELATED காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள்...