கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு 10 கோடியில் புதிய கட்டிடம்

சென்னை: கல்லூரிக் கல்வி இயக்ககம்,  சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்ட 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் 2019 ஜூலை 8ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண்: 110ன்கீழ் கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:கல்லூரிக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டு 54 ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் 9, 10ம் தளங்களில் இயங்கி வந்தது. அதே போல் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம் சைதாப்பேட்ைட பி.எட் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு தனி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 112 அரசுக்கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்பட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் என 1,534 கல்லூரிகள் உள்ளன. அதன்படி சைதாப்பேட்டை அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில் 3,534 ச.மீ பரப்பளவில் 10 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டு கட்டுமான பணிகளுக்கு ₹3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>