×

பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி பொதுப்பணித்துறையில் முதன்மை தனி அதிகாரி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி நடந்து வரும் சூழ்நிலையில், பொதுப்பணித்துறையில் முதன்மை தனி அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதலில் கடும் குளறுபடி நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இல்லாத பணியிடத்துக்கு கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் ஸ்வர்மாவில் நியமிக்கப்பட்டார். அதேபோன்று, 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த உதவி பொறியாளர் துளசிராமன் என்பவரை காவிரி ஆற்றுப்படுகை தூர்வாரும் பணியை கண்காணிக்க நியமனம் செய்து முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து அவர் அந்த நியமன ஆணையை ரத்து செய்தார். இருப்பினும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுபோன்ற குழப்பத்துக்கு கரன்சி வாங்கிக்கொண்டு பதவி உயர்வு, பணி மாறுதல் அளிப்பதே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, பணியிட மாறுதல் வழங்கும் முன்பு கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலரை தாண்டி இணை தலைமை பொறியாளர், முதன்மை தலைமை பொறியாளர் ஆகியோரை கடந்து அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் அரசாணையாக வெளியிடப்படுகிறது. அப்படி இருந்தும் பணிமாறுதலில் குளறுபடி ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே, பணியிட மாறுதல், பதவி உயர்வு, புதிய பணியிட தோற்றுவிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு முதன்மை தனி அதிகாரியாக பாண்டியன் என்பவரை நியமனம் செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.



Tags : Chief Personnel ,Public Works Department ,Govt ,Chief Solicitor ,Public Works Department: Task Force , Workplace Transfer, Promotion, Public Works Department, Govt
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...