தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் 7.70 லட்சம் பறிமுதல்

சென்னை: அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ரூ.7.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1.26 லட்சம், புரசைவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.95 லட்சம், விழுப்புரம் மாவட்ட சின்ன சேலம் வாட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 90 ஆயிரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புதுறை அலுவலகத்தில் ரூ. 72 ஆயிரம், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம்  ரூ.7.70 லட்சம் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டன.

Related Stories:

>