×

அண்ணா பல்கலையில் பகவத் கீதை பாடம் கவர்னர் கிரண்பேடி வரவேற்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை பாடமாக வைத்ததற்கு வரவேற்றுள்ள கிரண்பேடி மனிதனின் வாழ்வாதாரத்திற்கு உதவக்கூடியது என்றும் கூறியுள்ளார்.  புதுவை கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை 5.30 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் டிஜிட்டல் பேனர்கள் முழுவதுமாக  அகற்றப்படவேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி மாநிலம் முழுவதிலும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றும் பணியில் புதுச்சேரி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் வித்தியாசம் இன்றி ரோந்து பணியில் ஈடுபடும்  போலீசார் எந்த இடத்தில் டிஜிட்டல் பேனர்கள் இருந்தாலும் அதனை அகற்றுகின்றனர்.

தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நான் வரவேற்கிறேன். அண்ணா பல்கலைகழக தத்துவ படிப்பில் பகவத் கீதை இணைப்பு வரவேற்புக்குரியது. பகவத் கீதை ஒரு மதத்தை பற்றி கூறுவது அல்ல. ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ள பகவத் கீதை உதவும். பகவத் கீதை ஒரு குறிப்பிட்ட  மதத்திற்கானது அல்ல. அனைத்து மதத்திற்கும் பொதுவானது.

Tags : Governor ,Anna University , Anna University, Bhagavad Gita Chapter, Governor Karnapedi
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...