×

வெட்டி பந்தாக்களில் காலத்தை கடத்த நினைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு : அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி  வாங்க உயர்நீதிமன்றத்துக்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.  இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். வெட்டி பந்தாக்களிலும், போலி கவுரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதல்வரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது  மாதிரி எந்த சாதனையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Tags : Edappadi Palanisamy ,bandits ,MG Stalin , Chief Minister Edappadi Palanisamy, MK Stalin
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை