×

நீட் தேர்வு முறைகேட்டுக்கு வாய்ப்புகள்: கல்வியாளர்கள் கருத்து

சென்னை: நீட் ஆள்மாறாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. ஓராண்டுக்கு  மட்டும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு ேகாரி சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்துவதில்  உறுதியாக இருந்ததால், இதுவரை தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கவில்லை.

இந்நிலையில் நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணையில் நெட்வெர்க் அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில், தினசரி பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகி வருகின்றன. 2016ம் ஆண்டு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பல்வேறு வகைகளில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது கல்வியாளர்கள் கூறியதாவது:

*உருவ ஒற்றுமை உள்ள இருவரில் ஒருவரை மற்றொருவருக்கு பதிலாக தேர்வு எழுத வைக்க முடியும். ஆனால் பயோமெட்ரிக் பதிவேடு, கைரேகை பதிவு செய்யப்படும்பட்சத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்கலாம். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்  செய்தவர் தமிழக மருத்துவக்கலந்தாய்வில் சீட் தேர்வு செய்த விவகாரம் வெளிவந்ததும் வரும் கல்வியாண்டு முதல் பயேமெட்ரிக் முறையில் மாணவர்கள் சரிபார்க்கப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்.
*முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் சீட் தேர்வு செய்து மாணவர்கள் சேராத இடங்களுக்கு 2வது கட்ட கலந்தாய்வும், ஒவ்வொரு கட்ட கலந்தாய்விலும் மாணவர்கள் சேராத இடங்களுக்கு செப். 31ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தி முடிக்க  வேண்டும். இவற்றில் மாணவர்கள் சேராத இடங்களை கணக்கில் காட்டாமல் தரவரிசைப்பட்டியலில் இடம்பெறாதவர்களை கல்லூரியில் சேர்க்க முடியும். தமிழக மருத்துவ கலந்தாய்வில் கூட ஒவ்வொரு கட்ட மருத்துவக்கலந்தாய்வுக்குபின்,  வெளிப்படையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை.
*ஒரு மாணவரின் நீட் மதிப்பெண் மற்றொரு மாணவர் தெரிந்துகொள்ள முடியாது. பதிவு எண், பிறந்த தேதியை அளித்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட மாணவரின் மதிப்பெண்ணை மத்திய அரசு வசம்  உள்ள தகவல்களோடு ஒப்பிட்டால் மட்டுமே போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்களை சமர்பித்தவர்களை கண்டுபிடிக்க முடியும்.
*இதுதவிர வினாத்தாள் வடிவமைப்பவர்களுக்கு பணம் கொடுத்து, வினாத்தாளை முன்கூட்டியே பெறும்பட்சத்தில் குறிப்பிட்ட மாணவர்கள் எளிதாக அதிக மதிப்பெண் பெற்றுவிடுவார்கள்.
*தேர்வு நடத்தும் ஏஜென்சியில் முறைகேடு செய்பவர்கள், 180 கேள்விகளில் மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்துவிடுவார்கள். அவர்களின் விடைத்தாளில் வேறு  நபர்கள் சரியான விடையை பூர்த்தி செய்துவிடுவார்கள். அதன்மூலம் குறிப்பிட்ட மாணவர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார். இவை தவிரவும் பல்ேவறு வழிமுறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு கல்வியாளர்கள்  கூறினர்.

Tags : Need choice, abuse, academics
× RELATED பள்ளியில் நடந்த மருத்துவ...