×

‘டிராபிக் ராமசாமி’ பட வெளியீட்டு உரிமை தருவதாக 21 லட்சம் மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

சென்னை:  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் கடந்த 1ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு  உரிமையை பிரமானந்தம் சுப்பிரமணியன் என்பவருக்கு கொடுப்பதாக கூறி ரூ.21 லட்சம் முன்பணம் பெற்றுகொண்டார். சில நாட்களுக்கு பிறகு தானே வெளியிட்டு கொள்வதாக கூறி பணத்தை பின்பு கொடுத்துவிடுவதாக கூறி இருந்தார்.  ஆனால் ஒன்றரை வருடங்கள் கடந்தும் பணத்தை கொடுக்கவில்ைல. இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள பிரமானந்தம் சுப்பிரமணியனுக்கு பதில் நான் பணத்தை கேட்ட போது முறையான பதில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.புகாரின்படி உயர் போலீசார் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விளக்கம் கேட்டிருந்தனர். அதன்படி தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் ேநற்று மாலை போலீசார் கமிஷனர் அலுவலகம் வந்து ரூ.21  லட்சம் மோசடி குறித்து விளக்கம் அளித்தார்.

பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமையை பிரமானந்தம் சுப்பிரமணியன் கேட்டார். அதன்படி முன்பணமாக ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.   பிறகு பிரமானந்தம் சுப்பிரமணியன் என்னால் படத்தை வெளியிட முடியாது மீதமுள்ள பணத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறினார். இதனால் நானே அந்த படத்தை வெளியிட்டேன். அந்த படம் விரும்பியபடி ஓடவில்லை. கடைசி  நேரத்தில் படத்தை வெளியிட யாரும் முன்வராததால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் நான் கனடாவில் உள்ள பிரமானந்தம் சுப்பிரமணியனிடம் கூறி படம் வெளியீட்டுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். நான் 41 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நான் நேர்மையாகத்தான் தொழில் செய்து வருகிறேன். என் புகழை கெடுக்கும் வகையில் மணிமாறன் புகார் கொடுத்துள்ளார். அதற்கான விளக்கத்தை நான் உயர் அதிகாரிகளிடம்  தெரிவித்துள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : SA Chandrasekhar ,Tropic Ramasamy , Tropic Ramasamy, Fraud: Commissioner's Office, Producer SA Chandrasekhar
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...