×

தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சர் விளக்கம்

சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவப் பாடப்புத்தகங்கள், இலவச நோட்டுகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு  அனைத்து பாடங்களுக்குமான இரண்டாம் பகுதி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் இலவச சீருடை, பாடப்புத்தகம் எடுத்து செல்லும் பைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்ேபாது கீழ் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நிருபர்கள் கேள்வி  எழுப்பினர். ஆனால், அது குறித்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் முதல்  3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் முதல் 3 ஆண்டுகளில் தோல்வி என்பது யாருக்கும் ஏற்படாது. 1 முதல் 8ம் வகுப்பு  வரையில் உள்ள தேர்வுகளில் அடுத்த 3 ஆண்டுகளில் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். அதனால் நீண்ட தூரம் செல்ல  வேண்டிய அவசியம் ஏற்படாது. 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ தேர்வு  முறையை ரத்து செய்வது குறித்து கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு  எடுக்கப்படும்.  இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.



Tags : Ratha ,general election ,Minister ,Tamil Nadu , Tamil Nadu, General Elections, Minister Senkottaiyan
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை