×

நகைக்கடையில் 13 கோடி நகை கொள்ளை முக்கிய குற்றவாளி சிக்கினான்: கூட்டாளிக்கு வலைவீச்சு

திருச்சி:  திருச்சியில் பிரபல நகை கடையில் 13 கோடி நகைகள் கொள்ளையடித்தவர்கள்  திருவாரூரில் நடந்த வாகனை சோதனையில் ஒருவர் சிக்கினார்.  மற்றொருவன் தப்பியோடிவிட்டான். அவனை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது. கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு நேற்றுமுன்தினம் அதிகாலை உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 28 கிலோ தங்க நகைகள், 145 கேரட் வைரம், 96 கிராம் பிளாட்டினம் என ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.  நேற்று 2வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடையில் உள்ள 190 பேரில் 10 பேர்  வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். கொள்ளை கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என வடமாநில ஊழியர்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10 கொள்ளை கும்பல் ஊடுருவல்: புதுக்கோட்டையில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த  5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள்தான்.   அவர்கள், தமிழகத்தில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த 10 கொள்ளை கும்பல் ஊடுருவி இருப்பதாக  தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை  நடந்து வருகிறது.

ஜவுளி கடைகளில்: கடைக்குள் உலா வந்த 2 கொள்ளையரும், ஜீன்ஸ் மற்றும் தலையை மறைக்க கூடிய குல்லா கொண்ட ஜெர்க்கின் அணிந்திருந்தனர். மேலும் முகத்தை மறைக்க சிங்கம் மற்றும் முயல் உருவம் கொண்ட மாஸ்க் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த ஜெர்க்கின் புத்தம் புதிது. கொள்ளையடிக்க வரும்போது தான் அணிந்துள்ளனர். எனவே சத்திரம் பஸ் நிலையம், என்எஸ்பி ரோடு, சிங்காரதோப்பு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் கொள்ளையர்களின் படத்தை காட்டி விசாரிக்கின்றனர்.


பக்காவான ஸ்கெட்ச்: சுவரில் போடப்பட்ட துளை வழியாக கொள்ளையர் முதலில் சென்ற இடம் மேலாளர் அலுவலகம். அங்கு கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் அந்த கதவை திறந்து எளிதில் நகைகள் வைக்கப்பட்டிருந்த தரை தளத்துக்கு தவழ்ந்து வந்த முதல் கொள்ளையன், ரேக்குகளில் இருந்த நகைகளை எடுத்து பேக்குகளில் அடுக்கினார். தொடர்ந்து மற்றொரு 2வது பேக்கில் மீண்டும் நகைகளை எடுத்து வைக்கிறான். மேலும் அங்கிருந்து கல்லாபெட்டியை ஸ்குரு டிரைவரால் நெம்பி திறந்து பார்க்கிறான். இந்த சம்பவங்கள் நள்ளிரவு 2 மணிமுதல் 3.30 மணி அரங்கேறி உள்ளது. இந்நிலையில் திருவா ரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை நிறு த்தி விசாரிக்க  முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பி க்க முயன்றனர்.

அதில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் மற்றொருவன் தப்பியோடி விட்டான். பிடிப்பட்ட நபரை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் அவர் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற மடப்புரம் மணிகண்டன் (32) என்று தெரியவந்தது. இவரிடம் விசாரித்தபோது திருச்சி நகை கொள்ளையில் இவன் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தது. அவன் வைத்திருந்த பையில் இருந்த நகைகளில் இருந்த பார்கோடுகளை ஸ்கேன் செய்துபார்த்தபோது  அது லலிதா ஜூவல்லரி நகைகடையில் கொள் ளை போனது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூட்டாளி திருவாரூரைசேர்ந்த சுரேஷ் (28) என்பவரை பிடிக்க திருவாரூர் முழுவதும் போலீசார் உஷார் படுத்த ப்பட்டுள்ளனர். சுரேஷை பிடிக்க தனிப்படையினர் அவனது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.Tags : jewelery robbers ,jewelery shop , Jewelry, jewelry robbery
× RELATED நெல்லையில் பிரபல நகை கடைக்கு சீல் வைத்தது மாநகராட்சி நிர்வாகம்