×

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய போலீஸ்காரர் உடல் தகனம்: இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஹூஸ்டன்:  அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய போலீஸ் அதிகாரியின் உடல் தகனம் நடைபெற்றது. அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் சந்திப் சிங் தலிவால்(42). இவர் ஹூஸ்டன் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.  கடந்த 30ம் தேதி அவர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக சென்ற காரில் இருந்த ராபர்ட் ேசாலிஸ் என்பவர்  திடீரென சரமாரியாக தலிவாலை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அமெரிக்க காவல்துறையில் தாடி வளர்க்கவும், டர்பன் கட்டவும் அனுமதி பெற்றிருந்த முதல் போலீஸ்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் தலிவால். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள பெர்ரி மையத்தில் அவரது  உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக சீக்கிய பாரம்பரிய முறைப்படி தலிவால் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் அடங்கிய பெட்டி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு வானத்தில் ஹெலிகாப்டரில் இருந்தபடி வீரர்கள்  மலர்தூவினர். பின்னர் தலிவால் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட நிலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இதில் 8,000க்கும் அதிகமாக  போலீஸ்அதிகாரிகள், சீக்கிய மதத்தினர், இந்திய அமெரிக்கர்கள் மற்றும் ஹூஸ்டன் பகுதி வாழ்மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பெர்ரி மையத்தில் நடந்த இறுதி பிரார்த்தனையில்  தலிவாலின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதையடுத்து அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Tags : policeman ,funeral ,Sikh ,US , Shot, United States,policeman ,cremated
× RELATED ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர்...