×

சீனாவில் ஊழல் செய்த அதிகாரியின் பாதாளஅறையில் 13 டன் தங்கம் பறிமுதல் : 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரொக்கமும் பறிமுதல்

பீஜிங் : சீனாவில் ஊழல் செய்து 13 டன் தங்கம், 2.34 லட்சம் கோடி ரொக்கம் சேர்த்து வைத்திருந்த  முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார். சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி நடக்கிறது. இங்கு ஊழல் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும். இப்போதை அதிபர் ஜீ ஜிங்பின், ஊழல்வாதிகளை களை எடுத்து வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அமைப்பில் இருந்தவர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஊழலுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில் இருந்தவர் ஜாங் குயின் (58). இவர் டான்ஜோவின் நகர முன்னாள் மேயர். ஜாங் குயின் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து அவரது வீட்டில் சீனா போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டின் ரகசிய பாதாள அறையை திறந்து சோதனை செய்தபோது, போலீசாரும், அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். காரணம், அங்கு மலைபோல் தங்கக்கட்டிகள் இருந்தன. இதேபோல், சீன பணம் கட்டுக்கட்டாக இருந்தன.

தங்கத்தை சோதனையிட சாதாரண தராசுகள் போதாது என்பதால், லாரி புக்கிங் ஆபிஸ்களில் மூட்டைகளை எடை போட பயன்படும் பெரிய எடை மேடைகளை கொண்டு வந்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் மொத்தம் 13 டன் தங்கம் அங்கு இருந்தது தெரியவந்தது. இதுதவிர சீன பணம், இந்திய மதிப்பில் 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி மேலிடத்துக்கு அவர்கள் தகவல் அளித்தபோது, உயர் பதவியில் இருக்கும் அமைச்சர்களும், அதிபருமே அதிர்ந்து விட்டனராம். இதையடுத்து அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்படி போலீசார் ஜாங் குயின்னை கைது செய்தனர்.

ஜாங் மாகாண தலைநகரான ஹைனானின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளராக ஜாங் குயின் இருந்தார், அந்நாட்டு அதிகாரிகளின் தரவரிசைப்படி, ஜாங் குயின்னின் பதவி மேயருக்கு சமமானதாக இருந்தது. அவர் ஹைனான் மாகாணத்தின் நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவ்வளவு பெரிய அளவில் அவர் ஊழல் செய்து சொத்து சேகரித்திருப்பதால், அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இவ்வளவு பெரிய அளவில் ஊழலில் சேர்க்கப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை.

Tags : China ,cellar , 13 tons, gold confiscated , China's corrupt official's cellar
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...