×

உ.பி.யில் நள்ளிரவிலும் நடந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் : 100க்கும் மேற்பட்ட பாஜ எம்எல்ஏக்கள் பங்கேற்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி நள்ளிரவிலும் நடந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் ஏராளமான பாஜ எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி உத்தரப் பிரதேச அரசு சார்பில் 36 மணி நேரம் தொடர்ந்து நடக்கும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவிலும் இந்த கூட்டம் நீடித்தது. உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசினார்கள்.

மொத்தமுள்ள 403 உறுப்பினர்களில் காங்கிரஸ், பிஎஸ்பி, சமாஜ்வாடி, சுகுல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. மொத்தமுள்ள 301 பாஜ எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டோர் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் நள்ளிரவு ஒரு மணியளவில் புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், கட்சியின் ரேபரேலி தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றார். இதுகுறித்து கேட்டபோது, “தொகுதி மேம்பாடு குறித்து பேச முயற்சிக்கிறேன். என் தொகுதி மேம்பாட்டுக்கு தான் நான் முதல் முக்கியத்துவம் தருவேன்” என்றார்.

Tags : assembly meeting ,BJP ,UP Midnight ,Special Session , Special session , UP midnight
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டத்தை...