×

நாகர்கோவில் மாநகரில் ரூ65 லட்சம் மதிப்பில் 270 காமிராக்கள்: கட்டுப்பாட்டு அறை திறப்பு விழாவில் எஸ்பி பேட்டி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் திருட்டு, வழிப்பறி, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிய மணிமேடை, கோட்டாறு, வடசேரி, அண்ணா பஸ் நிலையம் உள்பட முக்கிய சந்திப்புகளில் காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை எஸ்பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வன அலுவலர் ஆனந்த், ஏஎஸ்பி ஜவஹர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த எஸ்பி நாத் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டம் முழுவதும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் மாநகாட்சியில் ஏற்கனவே அண்ணா பஸ் நிலையம், மீனாட்சிபுரம், வடசேரி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் 270 காமிராக்கள் பொறுத்தப்படுகின்றன. இதில் 150 காமிராக்கள் ஏற்கனவே பெறுத்தப்பட்டுவிட்டன.

மீதம் உள்ள காமிராக்கள் உடனடியாக பொறுத்தப்படும். இந்த காமிராக்கள் எஸ்பி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதற்காக 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். இதே போல் குலசேகரம், கருங்கல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் காமிராக்கள் பொறுத்தும் பணி நடந்து வருகிது. சப்-டிவிஷன்களில் அமைக்கப்படும் காமிரா டிஎஸ்பி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கன்னியாகுமரியில் 100 காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.  கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்ட பின்னர் செயின் பறிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. காமிரா மூலம் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டறிய முடியும். சட்ட ஒருங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சாலைகள் விரைவில் சீரமைப்பு கலெக்டர் தகவல்

கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது: அவ்வைசண்முகம் சாலை உள்பட பாதாள சாக்கடை, புத்தன் அணை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சரி செய்யப்படும். தற்போது மழை பெய்வதால் பணி மெதுவாக நடக்கிறது. வரும் ஜூன் 2020க்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையும். மேலும் ஒரு இடத்தில் ேதாண்டினால் அந்த இடத்தை மூடிய பின்னரே வேறு இடத்தில் பள்ளம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கோட்டாறு பகுதியில் லாரிகள் நிறுத்தத்தை முறைப்படுத்தவும், சென்டர் மீடியன் பொறுத்தி இருவழி பாதை அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் பாலமோர் சாலை சீரமைப்பு பணியும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : SP ,Nagercoil Municipality , Camera, control room, opening ceremony, esp
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...