×

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனுவை  உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

28 நாட்களாக திகார் சிறையில் ப.சிதம்பரம்

*ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்,  அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

*இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை  சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள  சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.

*பின்னர், அவரை செப்டம்பர் 5-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திகார் சிறையில்  அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

*சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்தது.

*இதையடுத்து மீண்டும் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரிய  ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் அமர்வு நாளை விசாரிக்கிறது.

அக்டோபர் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு:

*இந்நிலையில் 28 நாட்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம், நீதிமன்ற காவல் முடிந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  இன்று ஆஜர்படுத்தபட்டார்.

*அப்போது ப. சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ கோரியது. இதையேற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார்,  ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.


Tags : hearing ,Supreme Court ,SC ,Chidambaram ,Aieneks , Aieneks. SC scam: SC withdraws plea seeking probe
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...