×

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 540 ரவுடிகள் கைது

நெல்லை: நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்று வரை 540 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் ஆகிய  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம்தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்களிக்க வேண்டி கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் மீது 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பிரமாண பத்திரத்தில் (உறுதி மொழி பத்திரம்) இரு ஜாமீன்தாரர் உள்ளிட்டவர்களிடம் கைெயழுத்து பெற்று சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி முதல் இன்று வரை தாழையூத்தில் 30 வழக்கும், மானூரில் 40ம், பாளை தாலுகாவில் 35ம், நாங்குநேரியில் 55ம், களக்காட்டில் 40ம், முன்னீர்பள்ளத்தில் 40ம் உள்ளிட்ட பல காவல் நிலையத்தில் என மொத்தம் 330 வழக்குகளும், நெல்லை மாநகரத்தில் பாளையங்கோட்டையில் 45 வழக்குகளும், பெருமாள்புரத்தில் 35ம், மேலப்பாளையத்தில் 35ம் என மொத்தம் 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 330 வழக்குகளும், மாநகரத்தில் 210ம் என மொத்தம் 540 ரவுடிகள் இன்று வரை கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 107 மற்றும் 110 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் ரவுடிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து ஆர்டிஓவிடம் ஆஜர்ப்படுத்தி வரும் ஆறு மாத காலத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயல்கள் மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபடமாட்டேன் என பிரமாண பத்திரத்தில் .உறுதி மொழி அளித்து எழுதி கொடுத்து விட்டு சொந்த ஜாமீனில் செல்வர். இதுபோன்று மாநகரத்தில் கைது செய்யப்படும் ரவுடிகள் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் பிரமாண பத்திரத்தில் உறுதி மொழி அளித்து எழுதி கொடுத்து விட்டு சொந்த ஜாமீனில் செல்வர். இந்த பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடுபவர்கள் ஆறு மாதத்திற்குள் ஏதேனும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினால் அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தும் ஜாமீன் ரத்து செய்தும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவர். மேலும் இந்த பிரிவுகளில் ரவுடிகள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

Tags : Nunguneri, by-election, paddy, rowdy, arrested
× RELATED சிறைக்கைதி உயிரிழப்பு