×

டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் ஜம்மு மக்களுக்கான நவராத்திரி பரிசு: பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கட்ரா பகுதி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீரின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு. ஆன்மிக பயணத்துக்கு ஏற்ற ரயில்சேவையாகவும்  வந்தே பாரத் விரைவு ரயில் திகழும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த ரயில் சேவை குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வந்தே பாரத் ரயில் சேவை ஜம்மு மக்களுக்கான நவராத்திரி பரிசு. அத்துடன் இது வைஷ்னோ தேவி அம்மாவின் பக்தர்களும் சிறப்பான நவராத்திரி பரிசாக அமையும். டெல்லி முதல் கட்ரா வரையிலான இந்த ரயில் சேவை ஆன்மிக சுற்றுலாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.



முன்னாத இந்த ரயிலின் தொடக்க விழாவில் பங்கேற்ற ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், வரும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் எனக் கூறினார். நாட்டின் இரண்டாவதுவந்தே பாரத்விரைவு ரயிலானது டெல்லியில் இருந்து காலை ஆறு மணிக்கு புறப்பட்டு மதியம் இரண்டு மணிக்கு கட்ரா சென்றடைகிறது. இதையடுத்து பிற்பகல் மூன்று மணிக்கு கட்ராவில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு டெல்லி வந்தடைகிறது. பொதுமக்களுக்கான இந்த ரயில் சேவை வரும் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,Bharat ,Delhi ,Jammu ,Vande Bharat , Vande Bharat, Fast Train, Jammu, Navratri Prize, Prime Minister Modi
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...