×

தமிழகத்தில் அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: அமைச்சர் கருப்பணன்

சென்னை: தமிழகத்தில் அஜினமோட்டாவை தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். தமிழகத்தில் ஓட்டல்களில் அஜினமோட்டோ அதிகளவில் பயன்படுத்துவதாக புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. ருசிக்காக அஜினமோட்டாவை பயன்படுத்துகிறார்கள். இதனால், நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், அஜினமோட்டா பயன்பாடு அதிகளவில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் கருப்பணன் இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாறுபாடு குறித்து நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் இன்று பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர், “தமிழகத்தில் அஜினமோட்டோவை தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் அஜினமோட்டாவை தடை செய்வது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

Tags : Government ,Karupanan ,Ajinamoto ,Tamil Nadu ,Minister Karupanan ,Nadu , Ajinamoto, Prohibition, Minister Karupanan
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...