×

களைகட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல் ; அதிகபட்சமாக நாங்குநேரியில் 23 பேர் போட்டி

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 23 பேர் போட்டியிடுகின்றனர்.

 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதியில் போட்டியிட ஒரு பெண் உள்பட மொத்தம் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முழு விவரம்


*விக்கிரவாண்டி தொகுதியில் 28 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

*வேட்புமனு செய்தவர்களின் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. அப்போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் மனு தாக்கல் செய்த நா.புகழேந்தி, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த முத்தமிழ் செல்வன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 15 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*13 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

*வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேரில் 3 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

*விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரி இடைத் தேர்தல் முழு விவரம்

*நாங்குநேரி தொகுதியில் 46 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

*காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்திருந்த ரூபி மனோகரன், அதிமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நாராயணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உள்ளிட்ட 24 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டது.

*22 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

*வேட்பு மனு தாக்கல் செய்த 24 பேரில் ஒருவர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றார்.

*நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

*20 சுயேட்சைகள் உட்பட 13 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி


புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 11 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா, நாம் தமிழர் கட்சி பிரவீனா மதியழகன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Congress, AIADMK, DMK, Nammu Tamil Party, Puducherry, Kamaraj Nagar
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...