×

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னையோ தன் குடும்பத்தையோ அழிக்கப்போவதில்லை: ஜோ பிடென்

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னையோ தன் குடும்பத்தையோ அழிக்கப்போவதில்லை என்று ஜோ பிடென் தெரிவித்துள்ளார். வருகின்ற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ட்ரம்ப்-க்கு எதிராக போட்டியிட வாய்ப்பு உள்ளவராக ஜோ பிடென்  கருதப்படுகிறார். அவர் அமெரிக்க துணை அதிபராக இருந்த போது அவரது மகன் உக்ரைனில் பணியாற்றிய போது எழுந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உக்ரைன் அதிபருக்கு அழுத்தம் தந்ததாகக்கூறி ட்ரம்ப் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் நெவாடா என்ற பகுதியில் புதன்கிழமை அன்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் எங்கும் செல்ல போவதில்லை என்றும் ட்ரம்ப் தன்னையோ தன் குடும்பத்தையோ அழிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். தன மீது எவ்வளவு மோசமான தாக்குதல் நடத்தினாலும் அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் தான் கண்டுக்கொள்ள போவதில்லை என கூறினார். வரலாற்றில் பலவீனமான ஒவ்வொரு வரும் தோல்விக்கு முன் எப்படி பயந்தார்களோ அதுபோல தான் ட்ரம்பும் தோல்வி பயத்தில் இவ்வாறு எல்லாம் செய்கிறார் என ஜோ பிடென் தெரிவித்துள்ளார். அடுத்த நவம்பரில் தான் வழங்க போகும் மோசமான அடியை எண்ணி ட்ரம்ப் கலக்கத்தில் அஞ்சி இருப்பதாகவும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய போவதாகவும் குறிப்பிட்டார்.


Tags : Donald Trump ,Joe Biden ,US , Trump ,not going , destroy , himself , family, Joe Biden
× RELATED அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை...