×

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 24 பேர்களில் நாம் தமிழர் வேட்பாளர் முருகன் வாபஸ் பெற்றதால் 23 பேர் களத்தில் உள்ளனர். அதேபோல், புதுச்சேரி காமராஜ்நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 11 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 2 சுயேட்சை வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : constituencies ,Puducherry Kamarajnagar ,Vikravandi ,Nankuneri ,Nanguneri , Vikravandi, Nanguneri, Puducherry Kamarajnagar, candidate list, by-election
× RELATED கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு...