×

போயிங் 737 என்.ஜி. விமானங்களில் விரிசல் உள்ளதா?: உடனடி ஆய்வு நடத்த விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன்: 165 போயிங் 737 என்.ஜி. விமானங்களின் கட்டுமானத்தில் விரிசல்கள் உள்ளனவா? என்பது தொடர்பாக உடனடியாக ஆய்வு நடத்துமாறு தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா, இந்தோனேசியாவில் விழுந்து நொறுங்கியதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த ரக விமானங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால் போயிங் நிறுவனம் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில், தற்போது அந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவில், 737 என்.ஜி ரகத்தின் விமானத்தில் சிறுசிறு மாற்றங்கள் மேற்கொண்ட போது அதன் கட்டுமானத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போயிங் கூறியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா விமான போக்குவரத்து நிர்வாகத்திற்கு போயிங் தகவல் கொடுத்தது.

இதையடுத்து 737 என்.ஜி. ரகத்தை சேர்ந்த விமானங்களில் சோதனை மேற்கொள்ளுமாறு தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பயணங்களை மேற்கொண்ட 165 விமானங்களில் விரைவாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இறக்கை பொருந்தியுள்ள இடத்தில் விரிசல் இருக்கும் பட்சத்தில், விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து விடும் என்பதால் உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு மணி நேரம் வரை சோதனை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிறுவனங்களில் 1911 என்ற எண்ணிக்கையில் 737 என்.ஜி. ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களில் ஒன்றான சவூத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தாங்கள் இயக்கும் விமானங்களில் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதுபோன்ற விரிசல் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

Tags : Crash ,airplanes ,orders airline ,US ,inspection Airplanes ,Boeing 737 NG Crash: Conduct Inspection , Boeing 737 NG aircraft, cracks, inspection, airline, US directive
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!