×

பொருளாதார தடைகளை நட்புறவு மற்றும் கூட்டாளி நாடுகள் மீறக் கூடாது: அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா: இந்தியா  ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை  கொள்முதல் செய்ய உள்ள நிலையில், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நட்புறவு மற்றும் கூட்டாளி நாடுகள் மீறக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா முடிவு செய்தது. அதன்படி சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 5 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதென ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. உக்ரைன் அரசியல் விவகாரத்தில் தலையிடுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்த சமயத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படும் நிலையிலும், எஸ்.400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளை தங்களது நட்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இல்லாத பட்சத்தில் பொருளாதார தடைகள் மூலம் எதிரி நாடுகளை அமெரிக்கா எதிர்கொள்ளும் சட்டம் 2017ன் படி பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யா உடனான இந்தியாவின் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மைக் பாம்பியோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதேவேளையில், குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்குமா என்று முன்கூட்டியே தீர்மானிக்கவும் முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு முதலாவது தவணைத் தொகை செலுத்தப்படும் போது இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்த அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : allies ,US ,countries , Economic sanctions, friendly countries, should not be , violated
× RELATED சிறுமி படுகொலை கண்டித்து முழுஅடைப்பு...