×

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி : திருப்பதியில் 4,300 போலீஸ் குவிப்பு ; ஆக்டோபஸ் கமாண்டோ படை பாதுகாப்புடன் சாமி ஊர்வலம்

ஹைதராபாத் : தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து திருப்பதியில் திரும்பிய திசையெல்லாம் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி திருப்பதி மலையை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது ஆந்திர மாநிலம் போலீஸ். இதனால் திருப்பதி மலையில் மட்டும் 4,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் குறிபார்த்து சுடக்கூடிய அதிநவீன பைனாகுலர் பொருத்தப்பட்ட எந்திர துப்பாக்கிகளுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஆந்திர மாநில அரசின் அதிரடி படை வீரர்களும் அதிநவீன துப்பாக்கிகளுடன் திருப்பதி மலையே சுற்றி வருகின்றனர். 1500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருப்பதியில் கூட்டத்தை கண்காணித்து வரும் போலீசார், மேலும் 1000 காவலர்களை நியமிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். திருப்பதி கோவிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவத்தில் பக்தர்கள் கூட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலை நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரமோற்சவத்தை முன்னிட்டு தினசரி நடைபெற்று வரும் மலையப்பப சுவாமி ஊர்வலம், ஆக்டோபஸ் கமாண்டோ படை பாதுகாப்புடன் நடத்த நேரிட்டுள்ளது. 


Tags : Tirupati ,Sami ,Octopus , Terrorists, Octopus, Commando Force, Intelligence, Tirupati
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...