×

காட்பாடி - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்: தண்டவாள விரிசலால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

வேலூர்: காட்பாடி- அரக்கோணம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. இதனால் அரை மணி நேரம் ரயிலோவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இருந்து ஒரு பலத்த சத்தம் கேட்டது இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய அதிகாரி ரயில்வே மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருப்பத்தூரில் இருந்து சென்னை வரக்கூடிய எட்டி என்ற விரைவு ரயிலானது வந்து கொண்டிருந்த போது இந்த விரிசலானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த ரயிலை ஊழியர்கள் சிவப்பு கொடியை காட்டி நிறுத்தி; தற்காலிகமாக ரயில்வே தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வபெ ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் இதனை பின்னால் வரக்கூடிய ஜோலார்பேட்டை - சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் சோளிங்கரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அரை மணி நேரம் அந்த ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக விரிசல் சரி செய்யப்பட்டு; ரயில் போக்குவரத்தை சீர் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரயில் சேவையானது 10 கி.மீ. வேகத்தில் செல்லும் படி ரயில்வே துறை தெரிவித்துள்ளனர். அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : Katpadi - Arakkonam ,route ,Arakkonam ,Katpadi , Katpadi - Arakkonam, cracks in rails
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...