ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

சென்னை:   ரயில்களின் முன்பதிவு இறுதி நிலவரம், காலியிடங்கள் விவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஐஆர்டிசிடிசி இணையதளத்தில் சார்ட்ஸ்/வேகன்சி என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள  பயணிகள் காலியிருக்கை இருக்கை நிலவரத்தை தாங்களாகவே அறிந்து கொண்டு, டிக்கெட் பரிசோதகரை  அணுகி தங்களின் வரிசைப்படி இடங்களை கேட்டு பெறலாம்.

இருக்கைகள் முழுதூர பயணத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா, பாதி தூரத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தை அறிந்து கொள்ளலாம். வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் பட்டியல் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பும், இரண்டாவது அட்டவணை ரயில் சென்றடையும் இறுதி ஸ்டேஷனுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும் கிடைக்கும். முதல் அட்டவணைக்கு பிறகு, அப்போதைய முன்பதிவு, டிக்கட் ரத்து போன்ற விபரங்களுடன் இரண்டவாது அட்டவணையில் தகவல் இருக்கும். ரயில் எண், பெயர், பயண தேதி, புறப்படும் இடம் ஆகிய விவரங்களை டைப் செய்தால், இறுதி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

Related Stories:

>