×

தாம்பரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தாம்பரம்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, தாம்பரம்  நகராட்சியில்,  நகராட்சி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில்,  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.சேலையூர் மற்றும் தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா (பொறுப்பு)  தலைமையில் நடைபெற்றது. இதில், சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மகளிர் குழுவினர், கல்லூரி மாணவ - மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

பேரணியில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றவர்கள், மார்க்கெட் பகுதியில் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதனிடையே, மேற்கு தாம்பரம் முத்துராங்கம் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு பொதுமக்கள், தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகன், முன்னாள் கவுன்சலர் மார்க்கெட் பாபு, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் லைன் மணி, எஸ்.சி.எஸ்.டி மாவட்ட தலைவர் கே.கந்தசாமி உட்பட ஏராளமானவர்கள் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பூங்கா வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

Tags : Tambaram Municipality , Tambaram Municipality, Plastic eradication awareness
× RELATED உலக புகையிலை ஒழிப்பு தினம்