×

தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 8 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கிண்டி மடுவங்கரை மசூதி காலனி 8வது தெருவை சேர்ந்த ஜமீல் அகமது (22), ஆலந்தூர் லப்பை தெருவை சேர்ந்த ரிஸ்வான் (52), ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த உதயகுமார் (எ) கொப்பரை (24), வேளச்சேரி பவானி நகர் 9வது ெதருவை சேர்ந்த அருண் (23), வெளிநாடு வாழ் இந்தியரை கடத்திய குற்றவாளியான எம்.ஜி.ஆர்.நகர் அங்காள பரமேஸ்வரி கோயில் 3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (22), சைதாப்பேட்டை கோதாமேடு 28வது பிளாக்கை சேர்ந்த மணிகண்டன் (எ) பட்டாபி (25), தாம்பரம் கடப்பேரி, திரு.வி.க.நகரை சேர்ந்த ஜெயந்திநாதன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த செங்குன்றம் அம்பேத்கர் நகர் 17வது தெருவை சேர்ந்த பழனிபாரதி (22) ஆகிய 8 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : series , Serial crime, kundas
× RELATED பதினோறாவது தொடர் தோல்வியை வரவு...