×

சென்ட்ரல், பாரிமுனை பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திரா கும்பல் சிக்கியது

தண்டையார்பேட்டை, அக். 3: சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், பூக்கடை, யானைக்கவுனி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்போன் திருட்டு சம்பந்தமாக 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்போன் திருடும் கும்பல் தலைவர் விஜயவாடாவை சேர்ந்த ரவி (29) என்பவர் தங்களை சென்னைக்கு அனுப்பியதாக கூறினர். இதையடுத்து ரவியை போலீசார் ேதடிவந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரிமுனைக்கு வந்த ரவியை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “விஜயவாடாவை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கூட்டநெரிசல், திருவிழா, பேருந்து, ரயில்நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்போன், மணிபர்ஸ் திருடும்படி கூறுவேன்.

ஒருநாளைக்கு 3 செல்போன் திருடி வந்தால் 500 ரூபாய் சம்பளம் கொடுப்பேன். கூடுதலாக செல்போன் திருடி வந்தால் ஊக்கத் தொகையும் வழங்குவேன். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை திருடவேண்டும். சனி, ஞாயிறு கிழமைகளில் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று கூறி, திருடப்பட்ட செல்போன்களை ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வேன்.” என்று போலீசிடம் கூறினார்.மேலும், இவர் கொடுத்த தகவலின்படி சோழவரத்தில் பதுங்கியிருந்த பிண்டி வெங்கடேசன் (28), ராகுல் ரவி (26), பிண்டி ராஜ் (22), ஞானி (19), ஏசு (26), துர்கா (24), சாய் (29), சீனு (23), ராக்கேஷ் (27), ஹலோ (22) ஆகிய 10 பேரை ேபாலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : raid ,areas ,gang ,Andhra ,Barimunai ,Central , Central, Barium, Road, Andhra Gang
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது