பாகிஸ்தான்-இலங்கை டி20 தொடர் உமர் அக்மல் மீண்டும் அணியில் சேர்ப்பு

இஸ்லாமாபாத்: இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒன்டே, 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒன்டே தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது.இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வாரியம் டி20 போட்டிக்கு 16 பேர் கொண்ட அணி வீரர்களை அறிவித்துள்ளது. இலங்கையுடனான முதல் ஒன்டேயில் இமாம் உல் ஹக் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இதுபோல் அபித் அலி, முகமது ரிஸ்வானும் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அகமது சேஷாத், உமர் அக்மல், பாகிம் அஸ்ரப் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் விபரம்: சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), அமது சேஷாத், ஆசீப் அலி, பாகிம் அஷ்ரப், பகர் ஜமான், ஹரிஸ் சோகைல், இப்திகார் அகமது, இமாம் வாசீம், முகமது அமீர், முகமது ஹாசின், முகமது நவாஷ், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, வகாப் ரியாஸ். அகமது சேஷாத் கடந்தாண்டு ஸ்காட்லாந்துடான டி20 போட்டியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அதன்பிறகு சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 311 ரன்கள் (சராசரி 51.83) சேர்த்து அசத்தினார். இதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில், கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஒன்டே தொடரிலிருந்து கழற்றி விடப்பட்ட உமர் அக்மல் வெல் பினிசராகவும், பாகிம் அஷ்ரப் 21 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்தை பிடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>