×

விஜய் ஹசாரே கோப்பை சட்டீஸ்கரை வீழ்த்தியது கர்நாடகா

பெங்களூரு:  விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கடந்த 24ம் தேதி தொடங்கியது. 37 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டிகளில் கேரளாவை ஜார்க்கண்டும், ஆந்திராவை சவுராஷ்டிராவும், நாகலாந்தை அசாம் அணியும் வீழ்த்தின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு போட்டியில் சட்டீஸ்கர் அணியும், கர்நாடகா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், தேவ்தத்தும் களமிறங்கினர். 8 ரன்கள் எடுத்திருந்தபோது தேவ்தத் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து கே.எஸ்.ராகுல் நிதானமாகவும், அணியின் கேப்டனான மணிஷ் பாண்டே அதிரடியாகவும் ஆடினர். மணீஷ் பாண்டே 118 பந்துகளில் 142 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்களும் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் கர்நாடக அணி 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய சட்டீஸ்கர் அணி, கர்நாடக அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

Tags : Karnataka ,Chhattisgarh ,Vijay Hazare Cup , Vijay Hazare Cup, Chhattisgarh, Karnataka
× RELATED சட்டீஸ்கரில் நக்சல்கள் 2 பேர் சுட்டுக்கொலை