×

டி20 போட்டியில் இலங்கை பெண்கள் அணி படுதோல்வி: ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா

சிட்னி: இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பெண்கள் அணியுடன் மூன்று இருபது ஓவர் போட்டி, மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 41 ரன் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. அலிஸா ஹீலி 148 ரன் (61 பந்து, 19 பவுன்டரி, 7 சிக்சர்) அடித்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு, 94 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா பந்து வீச்சில் கேரி 3 விக்கெட், ஷீட், வார்ஹாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Tags : Sri Lanka ,team ,match T20 match , Sri Lanka Women's Team, White Wash, Australia
× RELATED இந்தியா -இலங்கை - மாலத்தீவு 6...