×

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையே மாரத்தான் ஓட்டம்

கன்னியாகுமரி: ஒரு தேசம், வலிமையான தேசம் என்பதை வலியுறுத்தி அரியானா மாநிலத்தை சேர்ந்த 60 தடகள விளையாட்டு வீரர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மாரத்தான் ஓட்டத்தை நேற்று துவக்கினர்.  அரியானா மாநிலத்தை சேர்ந்த 60 தடகள விளையாட்டு வீரர்கள் “ஒரு தேசம், வலிமையான தேசம்” என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மாரத்தான் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, 150 வது ஆண்டு காந்தி பிறந்த நாளான நேற்று தங்களது மாரத்தான் ஓட்டத்தைத் கன்னியாகுமரியில் துவக்கினர். காஷ்மீர் லால் சவுக் எல்லை வரை உள்ள 3 ஆயிரத்து 640 கி.மீ தூரத்தை 370 மணி நேரத்தில் ஓடி கடக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த மாரத்தான் ஓட்டத்தை பா.ஜ., மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். சைனிங் இந்தியா டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஓட்ட தொடக்க நிகழ்ச்சியில் அமைப்பின் நிறுவனர் சத்பால் பாய், தலைவர் சுரேந்தர் சிங், செயலாளர் அசோக் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Kanyakumari ,Kashmir ,Marathon , Kanyakumari, Kashmir, Marathon flow
× RELATED காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது : பிரதமர் மோடி