×

கன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ ஒளி விழுந்தது: சுற்றுலா பயணிகள் திரண்டு பார்த்தனர்

கன்னியாகுமரி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்திலும் காந்தி உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.
ெதாடர்ந்து மதியம் 12 மணியளவில் காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இதை உள்நாடு, வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.காமராஜர் சிலைக்கு மரியாதை: காமராஜரின் 44வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதை தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்தனர்.

Tags : Gandhi ,Kanyakumari , Kanyakumari, Gandhi, ashes, flockingர்
× RELATED சொல்லிட்டாங்க…