×

வயநாடு - மைசூர் சாலையில் வாகனங்களை அனுமதிக்கக் கோரும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார்

திருவனந்தபுரம்: வயநாடு - மைசூரு இடையே ேதசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பாதை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதி வழியாக செல்கிறது. வயநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல இதுதான் முக்கியமான பாதையாகும். இந்த நிலையில் இரவு நேரங்களில் இவ்வழியாக வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு இரவில் இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசுடன் கேரள அரசு பலமுறை பேச்சு நடத்தியது. ஆனால் இரவு நேரங்களில் இந்த பாதையை திறக்க கர்நாடக அரசு மறுத்து விட்டது.

 இந்த நிலையில், பகலிலும் இப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வயநாடு மாவட்டம் பத்தேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த ஒரு வாரமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு வயநாடு எம்பியான ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த ராகுல்காந்தி பந்திப்பூர் சாலை பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த பிரச்னையை தேசிய அளவில் ெகாண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த பாதை தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்ள நாளை வயநாடு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அங்கு பத்தேரியில் நடக்கும் போராட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொள்கிறார்.

Tags : Rahul ,protest ,road ,Wayanad ,Mysore ,Mysore Road Rahul , Wayanad - Mysore ,Road, Rahul i,vehicles
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்